Home Featured நாடு மே மாதம் பெட்ரோல் எண்ணெய் விலையில் மாற்றமில்லை! சரவாக் தேர்தல் காரணமா?

மே மாதம் பெட்ரோல் எண்ணெய் விலையில் மாற்றமில்லை! சரவாக் தேர்தல் காரணமா?

615
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மாதம் தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல் எண்ணெய் விலைகளில் இந்த முறை மாற்றங்கள் எதுவும் இல்லை என்பதால், ரோன்95இன் விலை  ரிங்கிட்  1.70 ஆகவும், ரோன் 97 ரக பெட்ரோலின் விலை  ரிங்கிட் 2.05 ஆகவும் இருந்து வரும்.

டீசல் எண்ணெய் விலை ரிங்கிட் 1.55 ஆக தொடர்ந்து நிலைநிறுத்தப்படும்.

petrolமுடிவடைந்த ஏப்ரல் மாதத்தில் எண்ணெய் விலைகள் உலக அளவில் உயர்ந்தாலும், மலேசியாவில் மே மாதத்தில் எண்ணெய் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கு, எதிர்வரும் மே 5ஆம் தேதி நடைபெறவிருக்கும் சரவாக் தேர்தல்கள் ஒரு காரணமாக  இருக்கலாம் என கருதப்படுகின்றது.