Home Featured தமிழ் நாடு கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனித்தே ஆட்சி அமைப்போம் – கருணாநிதி பேட்டி!

கூட்டணி கட்சிகள் இல்லாமல் தனித்தே ஆட்சி அமைப்போம் – கருணாநிதி பேட்டி!

617
0
SHARE
Ad

karunanidhiசென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான தேவை ஏற்படாது என்றும் திமுக தனித்தே ஆட்சியைப் பிடிக்கும் என்றும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்திருக்கிறார்.

நேற்று கருணாநிதி அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, ‘திமுகவின் தேர்தல் பிரச்சாரம், சமூக வலைத்தளங்களின் தாக்கம், மதுவிலக்கு, இலவசங்கள் ஆகியவை குறித்து அவர் தன் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்.

தமிழக மக்கள் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதால் கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை மூன்றாவது அணி என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

திராவிட இயக்கங்களின் மீது மக்களுக்கு அலுப்பு ஏற்பட்டுவிட்டதா என்ற கேள்விக்கு, மக்களுக்கு அலுப்பு ஏற்பட நியாயமே இல்லையென்றும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்திருக்கும் 27 சதவீத இடஒதுக்கீடு என்பது, திராவிட இயக்கத்தின் சமுதாயப் பணிகளில் மிக முக்கியமான கட்டம் என்றும் கருணாநிதி கூறினார்.

திமுகவினரே மது ஆலைகளை நடத்தும்போது மதுவிலக்கை திமுக எப்படி அமல்படுத்தும் என்ற கேள்விக்கு, திமுகவினர் மது ஆலைகளை நடத்தவில்லை என்றும் அப்படி நடத்தினால், அவை மூடப்படும் எனவும் கருணாநிதி பதிலளித்தார்.

இலவசங்களை திமுக மக்களுக்காக அளிக்கிறது என்றும் அதிமுக ஊழல் செய்வதற்காக இலவசங்களை அளிக்கிறது என்றும் கருணாநிதி கூறினார். குடும்ப அரசியல் குறித்த குற்றச்சாட்டுகள் சரியானவையல்ல என்றும் கருணாநிதி தெரிவித்தார்.