Home தொழில் நுட்பம் கூகுள் க்ரொமிற்கு போட்டியாக ஸ்பார்டனை களமிறக்கும் மைக்ரோசாப்ட்! 

கூகுள் க்ரொமிற்கு போட்டியாக ஸ்பார்டனை களமிறக்கும் மைக்ரோசாப்ட்! 

632
0
SHARE
Ad

microsoft-windows-spartan-browserகோலாலம்பூர், ஜனவரி 2 – ‘உலாவி’ (Browser) என்றவுடன் பலருக்கு ‘கூகுள் க்ரொம்’ (Google Chrome) பளிச்சென நினைவுக்கு வரும். சிலர் ‘ஃபயர்பாக்ஸ்’ (FireFox) விரும்பிகளாகவும் இருக்கலாம்.

ஏனென்றால் மேற்கூறிய இரண்டு உலாவிகளும் அனைவரும் பயன்படுத்தும் வகையில் எளிமையானதாகவும், மிகுந்த செயல்திறன் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் இடம்பெற்று இருக்கும் மைக்ரோசாப்ட்டின் ‘இன்டர்நெட் எக்ஸ்புளோரர்’ (Internet Explorer)-ஐ பெரும்பாலான பயனர்கள் பயன்படுத்துவதே இல்லை.

#TamilSchoolmychoice

குறைந்த செயல்திறன் கொண்டதாக இருக்கும் இந்த உலாவி, பல சமயங்களில் பயன்படுத்துவோருக்கு மிகுந்த சலிப்பை ஏற்படுத்தும். இதனை நன்கு உணர்ந்த மைக்ரோசாப்ட், க்ரொமிற்கு போட்டியாக புதிய உலாவியை அறிமுகப்படுத்த இருக்கின்றது.

Spartan Browser‘ஸ்பார்டன்’ (Spartan) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உலாவியானது, விண்டோஸ் 10 இயங்குதளத்துடன் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஸ்பார்டன் உலாவி, க்ரொம் மற்றும் ஃபயர்பாக்ஸ்  உலாவிகளை விட எளிதானதாகவும், அதிக செயல்திறன் கொண்டதாகவும் இருக்கும் என மைக்ரோசாப்ட் வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும் விண்டோஸ் 10, கணினி மற்றும் திறன்பேசிகளுக்கு பொதுவான ஒன்றாக இருக்கும் என்பதால், உலாவியும் அனைத்து கருவிகளுக்கும் பொதுவானதாகவே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.