Home இந்தியா கிரிக்கெட்: 2015 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

கிரிக்கெட்: 2015 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

472
0
SHARE
Ad

indian-team-d-d-5600புதுடெல்லி, ஜனவரி 7 – உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூஸிலாந்தில் பிப்ரவரி 14 முதல் மார்ச் 29 வரை நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க உள்ள இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக சந்தீப் பாட்டீல் தலைமையிலான தேர்வுக் குழு மும்பையில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தது. சந்திப்புக்குப் பின் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் சஞ்சய் படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது;

“தோனி தலைமையில் இந்திய அணி களம் காணுகிறது. காயத்தில் இருந்து மீண்டு விடுவார் என்பதால் சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா, ஒரு சில ஆட்டங்களில் நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடியுள்ளதால் 20 வயதாகும் அக்ஸர் படேல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

33 வயதாகும் யுவராஜ் சிங் ரஞ்சி ஆட்டங்களில் சமீபத்தில் தொடர்ந்து 3 சதம் அடித்துள்ளார். ஏற்கெனவே அறிவித்த உத்தேச அணியில் அவரது பெயர் இடம்பெறவில்லை. எனினும் சேவாக், யுவராஜ், கம்பீர் குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவுடனான 4-ஆவது டெஸ்டில் காயம் காரணமாக விளையாடாத இஷாந்த் சர்மா, காயத்திலிருந்து மீண்டு விடுவார் என்பதால் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றார். ஆஸ்திரேலியாவுடனான இப்போதைய டெஸ்டுகளில் சிறப்பாக விளையாடவில்லை என்றபோதும் ஷிகர் தவணுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஆஸ்திரேலியாவில் டெஸ்டுகளில் சிறப்பாக விளையாடிவரும் முரளி விஜய்க்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 2011 உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்றவர்களில் தோனி, கோலி, அஸ்வின், ரெய்னா ஆகியோர் மட்டுமே தற்போதைய அணியில் இடம் பெற்றுள்ளனர்.

அதிலும், அப்போது இலங்கையுடனான இறுதி ஆட்டத்தில் 11 ஆட்டக்காரர்களில் ஒருவராக அஸ்வின் களம் இறங்கவில்லை. உலகக் கோப்பை போட்டிக்கு முன் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடருக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முத்தரப்பு தொடருக்கான அணி: தோனி (கேப்டன்), ஷிகர் தவண், ரோஹித் சர்மா, ரஹானே, கோலி, ரெய்னா, ராயுடு, ஜடேஜா, அஸ்வின், அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, உமேஷ் யாதவ், தவல் குல்கர்னி, மோஹித் சர்மா.