சென்னை, ஜனவரி 7 – தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ’பிரேம கதா சித்திரம்’ படத்தின் தமிழ் பதிப்பு தான் ‘டார்லிங்’. ஜி.வி.பிரகாஷ் குமார், நிக்கி கல்ராணி, ஸ்ருஷ்டி, கருணாஸ் ஆகியோர் நடித்து வெளியாக உள்ள படம் டார்லிங்.
ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க முதலில் துவங்கிய படம் ‘பென்சில்’. ஆனால் தற்போது முதலில் வெளியாவது ‘டார்லிங்’. இப்படத்தின் படப்பிடிப்பு வெறும் 30 நாட்களில் நடந்து முடிந்துள்ளது. படத்தில் ஜி.வி. தாடி, மீசையுடன் முரட்டுத்தனமாக நடித்திருக்கிறார்.
புதுமுக இயக்குநர் சாம் ஆன்டன் இயக்கத்தில் அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும், ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.
அந்த தெலுங்கு படம் ‘பிரேம கதா சித்ரம்’ படத்தை விட காட்சி அமைப்பிலும் ஒலி அமைப்பிலும் சிறப்பாக அமையும்படி நிறைய உழைத்திருக்கிறோம்.
ஒரு வெற்றிப் படத்தை மறுபடி எடுக்கும்போது அதைவிட மேம்பட்ட தரத்தில் எல்லா வகையிலும் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம் என சமீபத்திய பேட்டியில் ஜி.வி.பிரகாஷே கூறியுள்ளார்.
இப்போது எதிர்பாராத விதமாக ‘டார்லிங்’ பொங்கல் படங்களுடன் இணைந்துள்ளது. முதலில் பொங்கல் வெளியீடு பட்டியளில்இருந்த ‘என்னை அறிந்தால்’, ‘காக்கி சட்டை’, ‘கொம்பன்’ உள்ளிட்ட படங்கள் பின் வாங்க, வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு களம் இறங்கிவிட்டது ‘டார்லிங்’.
‘ஐ’, ‘ஆம்பள’, மற்றும் ‘டார்லிங்’ இப்போதைக்கு பொங்கல் அன்று வெளியாகளாம் எனவும் இதில் மாற்றம் நிகழுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவித்தனர்.