பாரீஸ், ஜனவரி 7 – பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசிலிருந்து வெளிவரும் ”சார்லி ஹெப்டே” என்ற நகைச்சுவை இதழின் அலுவலகம் மீது இன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை பாரிசில் அமைந்துள்ள இந்த பத்திரிக்கை அலுவலகத்தினுள் புகுந்த மூகமூடி அணிந்த ஆயுதம் தாங்கிய இரண்டு பயங்கரவாதிகள் அங்கிருந்த பணியாளர்களைத் கண்மூடித் தனமாகச் சுட்டுத் தள்ளினர்.
இந்த தாக்குதலில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட துப்பாக்கி வேட்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், பலியானவர்களில் இரண்டு காவல் துறை அதிகாரிகளும் அடங்குவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்த பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டே தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட இந்த சார்லி ஹெப்டோ இதழில்தான் இஸ்லாமிய மக்களின் இறைத்தூதர் முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்கள் 2006ஆம் ஆண்டில் மறு பிரசுரம் செய்யப்பட்டு பலத்த சர்ச்சைகள் எழுந்தன.
படங்கள்: EPA