Home உலகம் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன்!

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன்!

673
0
SHARE
Ad

Ki-moon_CARபுதுடெல்லி, ஜனவரி 8 – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்தியாவிற்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். பான் கீ மூன் வருகை குறித்து இந்திய அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:-

“வரும் 10-ம் தேதி, குஜராத்தின் அகமதாபாத்துக்கு வந்து சேரும் பான் கீ மூன், 11-ம் தேதி நடைபெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமம், சூரிய ஒளி மின் திட்டம் போன்றவற்றை அவர் பார்வையிடுவார். ”

“12-ம் தேதி உலக விவகாரங்களுக்கான இந்தியக்குழு சார்பில் டெல்லியில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் அவர் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பின்னர், 13-ந் தேதி இந்தியாவில் உள்ள ஐ.நா. அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டு அன்றே அவர் தனது இந்தியப் பயணத்தை முடித்துக் கொள்வார்” என்று அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதற்கிடையே இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட தலைவர்களும் பான் கீ மூனை சந்தித்து பேச இருப்பதாக கூறப்படுகின்றது.

மேலும், நோபல் பரிசு பெற்ற இந்தியர் கைலாஷ் சத்யார்த்தியை சந்திக்க பான் கீ மூன் விருப்பம் தெரிவித்துள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தனர்.