Home உலகம் 2014-ன் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு!

2014-ன் பாதுகாப்பான விமான நிறுவனங்களின் பட்டியல் வெளியீடு!

711
0
SHARE
Ad

Picture 5 - Jetstarகோலாலம்பூர், ஜனவரி 8 – 21 விமான விபத்துகள், 986 இறப்புகள் என விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிக மோசமான வருடமாக 2014-ம் ஆண்டு கருதப்பட்டு வரும் நிலையில், ‘AirlineRatings.com’ என்ற வலைத்தளம், கடந்த ஆண்டில் பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்திய விமான நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

AirlineRatings.com, உலக அளவில் 449 விமான நிறுவனங்களில் இருந்து 10 பாதுகாப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த வலைத்தளம்,  விமான நிறுவனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், விமான விபத்துகள், 10 வருடங்களில் இறந்தவர்களின் சதவீதம், அனைத்துலக சிவில் விமான போக்குவரத்து அமைப்பு,

#TamilSchoolmychoice

பாதுகாப்பு குறித்து வழங்கிய விதிகளை ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் அடிப்படையில் விமான நிறுவனங்களை மதிப்பீடு செய்துள்ளது.

air-nzஅந்தப் பட்டியலின் அடிப்படையில், ஏர் நியூசிலாந்து முதலிடத்தையும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இரண்டாம் இடத்தையும், ஃபின்ஏர் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

அதனைத் தொடர்ந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ், கேத்தே பசிஃபிக் மற்றும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் முறையே நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் இடத்தை பிடித்துள்ளன.

இந்த வரிசையில் எதிகாட், ஈவிஏ ஏர்லைன்ஸ், லூஃபஸ்தானா ஏர்லைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் ஏர்லைன்ஸ் ஆகியவை ஏனைய இடங்களை பிடித்துள்ளன.

இவற்றில் ஏர் நியூசிலாந்து விமான நிறுவனம் கடந்த 20 வருடங்களாக எத்தகைய விமான விபத்துகளிலும் சிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது,