’மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் திரிஷா.
15 வருடமாக நடிப்பில் தனக்கென தனி இடத்தினை இன்னும் தக்கவைத்து முன்னணி நடிகையாக கோடம்பாக்கத்தில் வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நம்பர் முன்னனி நடிகராக இருந்தவர்.
ஆரம்பத்தில் தெலுங்கு நடிகர் ராணாவும் த்ரிஷாவும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் நடைபெறப்போவதாகவும் தகவல்கள் கசிந்தன. பின்னர் தொழிலதிபர் மற்றும் தயாரிப்பாளர் வருண் மணியனுடன் தாஜ்மஹால் சுற்றுப் பயணம் சென்று பரபரப்பை ஏற்படுத்தினார் திரிஷா.
மேலும் திருமணம் என்றால் முதல் அறிவிப்பு என்னிடம் இருந்துதான் வரும் என டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார் திரிஷா. இந்நிலையில், இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக வருண் மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பது குறித்து த்ரிஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.
“ஜனவரி 23-ஆம் தேதி வருண்மணியனுடன் நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இன்னும் 2 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளேன். 2015-ஆம் ஆண்டில் நான் நடித்து 4 படங்கள் வெளியாக இருக்கின்றன” என்று திரிஷா தெரிவித்திருக்கிறார்.