Home இந்தியா ஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்: பான் கீ மூனுக்கு மோடி கடிதம்

ஐநா சபையில் இந்தியாவிற்கு நிரந்தர இடம்: பான் கீ மூனுக்கு மோடி கடிதம்

757
0
SHARE
Ad

modi-1புதுடில்லி – ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் வழங்கக் கோரி பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு இந்தியப் பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் தலைமையில், 150 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 70-வது பொதுச் சபைக் கூட்டம், வருகிற 25-ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற உள்ளது.

இதில் அமெரிக்க அதிபர் ஒபாமா, போப் ஆண்டவர் பிரான்சிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இந்தியப்பிரதமர் மோடியும் இதில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்காக அவர் 23-ஆம் தேதி நியூயார்க் செல்கிறார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவர்  ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

“ஐநா-விடம் நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம், பாதுகாப்புச் சூழலை உறுதி செய்வது தொடர்பான சீர்திருத்தங்கள் ஆக்கப்பூர்வமானவையாக இருக்கவேண்டும் என்பதுதான்.

குறிப்பாக ஐநா பாதுகாப்பு ஆணையத்தில் அவற்றைச் சிறந்த முறையில் நடைமுறைப்படுத்துவதையும் உறுதிசெய்யவேண்டும்.

நம் முன்பாக எத்தனையோ கடினமான பணிகள் இருந்தாலும் கூட இதுதான் மிகவும் அவசரமான மற்றும் முக்கியமான ஒன்றாகும்.

ஐநா பாதுகாப்பு ஆணையம் அதிகப் பிரதிநிதி நாடுகள் கொண்டதாகவும், பயன் தரத் தக்கதாகவும் இருக்கவேண்டும். இதில் இந்தியாவும் நிரந்தர இடம் பெறவேண்டும்” என்று எழுதியுள்ளார்.

விரைவில் ஐநா சபையில் இந்தியா நிரந்தர இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது.