Home இந்தியா தாலி பற்றிய பேச்சால் சர்ச்சை: குஷ்புவின் கொடும்பாவி எரிப்பு!

தாலி பற்றிய பேச்சால் சர்ச்சை: குஷ்புவின் கொடும்பாவி எரிப்பு!

592
0
SHARE
Ad

11-1360568752-kushboo-speech4-600நாகர்கோவில்- தாலி பற்றிய சர்ச்சைப் பேச்சால் குஷ்புக்கு எதிராக விசுவ இந்து பரிசத் அமைப்பினர் போராட்டம் நடத்தத் தொடங்கியுள்ளனர்.இப்போராட்டத்தின் போது அவரது உருவப்படமும் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

தந்தை பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை பெரியார் திடலில் ‘யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்’ என்ற தலைப்பில் மகளிர் கருத்தரங்கம் திராவிடர் கழகத்தின் சார்பில் நேற்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய குஷ்பு, “பெண்கள் எந்தக் கருத்தையும் வெளியே பேசத் தடை இருக்கிறது. அதையும் மீறித் துணிந்து வந்து பேச ஒரு திமிர் வேண்டும். அது என்னிடம் இருக்கிறது. அது பெரியாரிடமிருந்து எனக்கு வந்தது.

#TamilSchoolmychoice

அதேபோல் தாலி அணிவதும் அணியாததும் பெண்களின் தனிப்பட்ட உரிமை.அதில் சமூகம் எந்த விதத்திலும் தலையிடக் கூடாது” என்று பேசியிருந்தார்.

அவர் முற்போக்காக எதாவது பேசினாலே அது சர்ச்சையாகிவிடுவது வழக்கம்.அந்த வகையில் அவரது இந்தப் பேச்சும் இப்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

“தாலி பற்றிய இத்தகைய பேச்சிற்கு நடிகை குஷ்பு மன்னிப்புக் கேட்க வேண்டும்; தனது பேச்சை மீண்டும் திரும்பப் பெற வேண்டும்” என்று விசுவ இந்து பரிசத் இயக்கத்தினர் எதிர்ப்புத் தெரிவித்து நாகர்கோவிலில் வடசேரி சந்திப்பில் அவரது உருவபடங்களையும் கொடும்பாவியையும் எரித்தனர்.