Home இந்தியா மதுரை கிரானைட் குவாரியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: அதிகாரிகள் அதிர்ச்சி!

மதுரை கிரானைட் குவாரியில் தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள்: அதிகாரிகள் அதிர்ச்சி!

615
0
SHARE
Ad

19-1442635801-sagayam7-600மதுரை – நரபலிப் புகாரையடுத்துக் கிரானைட் குவாரி இருக்கும் பகுதியிலுள்ள சுடுகாட்டில் மீண்டும் ஆழமாகத் தோண்டும் பணி நேற்று தொடங்கியது. தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள் கிடைத்து வருவதால், நரபலிப் புகார் உண்மையாக இருக்குமோ என்கிற எண்ணம் வலுப்பெறத் தொடங்கியுள்ளது.

கிரானைட் குவாரியில் மன நலம் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டு வந்து நரபலி கொடுத்து, அருகிலுள்ள சுடுகாட்டில் புதைத்து விட்டதாகக் குவாரியில் முன்பு வேலை பார்த்த சேவற்கொடியான் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், கிரானைட் முறைகேடு விசாரணைக் குழுவின் தலைவர் சகாயம் முன்னிலையில் ஏற்கனவே 5 அடிதோண்டிய போது 7 மாதக் குழந்தையின் எலும்புக் கூடு உட்பட 4 பேரின் எலும்புக் கூடுகள் கிடைத்தன.

அவற்றில் குழந்தையின் எலும்புக் கூடு  இருதய நோயால் இறந்து போன அவ்வூரைச் சேர்ந்த செல்வி என்பரின் குழந்தை என்பது தெரிய வந்தது. அதேபோல் சிகப்புத் துணியுடன் கிடைத்த எலும்புக் கூடு அவ்வூரைச் சேர்ந்த சாமியாடி ஒருவருடையது எனத் தெரிய வந்தது. தடயவியல் ஆய்வுக்குப்பின் அவற்றை உறுதி செய்ய உள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அந்த இடம் 4 ஆண்டுகளாகத்தான் சுடுகாடாக உள்ளது. அதற்குமுன்பு அது சுடுகாடு இல்லை.எ னவே, அங்கே நரபலி கொடுத்த உடல்கள் இன்னும் ஆழத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறி, அந்த இடத்தை 10 அடிக்கும் மேல் மீண்டும் தோண்டும்படி சகாயம் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று காலையில் 10 அடி ஆழம் வரை தோண்டும் பணி துவங்கியது. 3ணி அளவில், 4.5 அடி ஆழம் தோண்டியபோது, பட்டு வேட்டி சுற்றப்பட்ட நிலையில், ஒரு மனித எலும்புக் கூடு கிடைத்தது. அதனருகே, தேங்காய், பாக்கு ஆகிய பொருட்கள் கிடந்தன.

மாலை 5 மணிக்கு, மீண்டும் ஒரு எலும்புக் கூடு தோண்டி எடுக்கப்பட்டது. இவ்விரு எலும்பு கூடுகளையும் பிளாஸ்டிக் கேன்களில் வைத்து, மருத்துவக் குழுவினர் மதுரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இன்றும் தொடர்ந்து தோண்டும் பணி நடக்கிறது. தோண்டத் தோண்ட எலும்புக் கூடுகள் கிடைத்து வருவதைக் கண்டு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள்  அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.