Home இந்தியா ஜெயலலிதா தமிழ்நாட்டின் பெயரையே ‘அம்மா நாடு’ என மாற்றி விடுவார்- கருணாநிதி எச்சரிக்கை!

ஜெயலலிதா தமிழ்நாட்டின் பெயரையே ‘அம்மா நாடு’ என மாற்றி விடுவார்- கருணாநிதி எச்சரிக்கை!

508
0
SHARE
Ad

karunanithiசென்னை – வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் தலைவிதி மாற்றப்படாவிட்டால், தமிழ் நாட்டின் பெயரையே ‘அம்மா நாடு’ என்று மாற்றி வைத்து விடுவார்கள் எனத் திமுக தலைவர் கருணாநிதி தனது டுவிட்டரில் கிண்டலடித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது என்னவெனில்:

“தமிழகத்தில்  ‘அம்மா’ என்ற பெயர் இல்லாத திட்டங்கள் ஏதாவது பாக்கி இருக்கிறதா? டாஸ்மாக் கடை ஒன்றிற்குத் தான் அம்மா பெயர் வைக்கவில்லை.

#TamilSchoolmychoice

தமிழ்நாட்டிலே ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறதா? சட்டமன்றத்தில் அரசை எதிர்த்து யாராவது ஒரு வார்த்தை கூற அனுமதிக்கப்படுகிறதா? எந்த அறிவிப்பாக இருந்தாலும் “எனது தலைமையிலான அரசு” என்று பேச்சுக்குப் பேச்சுச் சொல்லிக் கொள்வதிலும், “நான் ஆணையிட்டேன்” என்று தனக்குத்தானே மார்தட்டிக் கொள்வதிலும்தான் நேரம் போகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுத் தேர்தல் வர இன்னும் சில மாதங்கள்தான் உள்ளன. அடுத்த தேர்தலில் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாட்டின் தலைவிதியே மாறிவிடும். தமிழ் நாட்டின் பெயரையே மாற்றி “அம்மா நாடு” என்று பெயர் வைத்தாலும் வைத்து விடுவார்கள்” எனப் பதிவு செய்துள்ளார்.