Home Featured நாடு கைருடின் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலனாய்வுத் துறையினரை திங்கட்கிழமை சந்திக்க இருந்தார்!

கைருடின் அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலனாய்வுத் துறையினரை திங்கட்கிழமை சந்திக்க இருந்தார்!

764
0
SHARE
Ad

கோலாலம்பூர் – அம்னோ பத்து கவான் தொகுதியின் முன்னாள் துணைத் தலைவரும் பிரதமர் நஜிப்புக்கு எதிராக ஊழல் புகார்களைச் சமர்ப்பித்தவருமான டத்தோ கைருடின் அபு ஹாசான் எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எஃப்.பி.ஐ (FBI) அதிகாரிகளைச் சந்திக்க இருந்தார் என்று அவரது வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் அமெரிக்கப் பத்திரிக்கையான நியூயார்க் டைம்சிடம் தெரிவித்துள்ளார்.

Khairuddin-abu-hassanகோலாலம்பூரில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் உதவியோடு இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாகவும், அமெரிக்க எஃப்.பி.ஐ  அதிகாரிகளைச் சந்திக்க நேற்று கைருடின் (படம்)  அமெரிக்கா புறப்பட இருந்ததாகவும் மத்தியாஸ் சாங் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால், கைருடின் அமெரிக்கா செல்வது குடிநுழைவுத் துறையின் மூலம் தடை செய்யப்பட்டதோடு, அவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் அமெரிக்க புலனாய்வுத் துறை அதிகாரிகளுடனான அவரது சந்திப்புக்கு தடை ஏற்பட்டுள்ளதாகவும், 1எம்டிபி விவகாரம் குறித்து அமெரிக்கப் புலனாய்வுக் குழுவினர் மேலும் விசாரிப்பதில் முட்டுக்கட்டைகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும் நியூயார்க் டைம்ஸ் செய்தி தெரிவிக்கின்றது.

#TamilSchoolmychoice

கடந்த ஏப்ரல் மாதத்தில் நஜிப் மீது ஊழல் புகார் கூறியிருந்த கைருடின், அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்காக நேற்று அவரது மோண்ட் கியாரா இல்லத்தில் கைது செய்யப்பட்டு, டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

இன்று நீதிமன்றம் கொண்டுவரப்பட்ட கைருடினை 1எம்டிபி விவகாரம் தொடர்பில் மேலும் 6 நாட்களுக்குத் தடுத்து வைக்க காவல் துறையினர் நீதிமன்ற அனுமதியைப் பெற்றுள்ளனர்.