Home கலை உலகம் கதாநாயகி, பாடல்கள் இல்லாத ஆங்கிலப் படப் பாணியில் அஜித் படம்!

கதாநாயகி, பாடல்கள் இல்லாத ஆங்கிலப் படப் பாணியில் அஜித் படம்!

880
0
SHARE
Ad

veeram_movie_photos_ajith_tamanna_844ed86-1728x800_cசென்னை – நடிகர் அஜித் அடுத்து இயக்குநர் விஷ்ணுவர்த்தன் படத்தில் நடிக்கவிருக்கிறார்.இப்படம் ஆங்கிலப் படத்தின் தழுவல் எனக் கூறப்படுகிறது.

அஜித்- விஷ்ணுவர்த்தன் கூட்டணி வெற்றிக் கூட்டணியாகும். ‘ஆரம்பம்’ படத்திற்குப் பிறகு இம்முறை வித்தியாசமான கதைக்களத்தில் அஜித்தை நடிக்க வைக்க உள்ளார்.

ஹாலிவுட்டில் பெரும் வசூலைக் குவித்த கார் பந்தயம் பற்றிய படம் ஒன்றினைத் தமிழில் மறுபதிப்பு செய்ய இருவரும் முடிவெடுத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கார் பந்தயம் பற்றிய கதை என்பதால், உண்மையான கார் பந்தய வீரரான அஜித்துக்கு இது பொருத்தமாக இருக்கும் என்றும், மேலும் இது எதிர்மறைக் குணம் கொண்ட கதாநாயகனைப் பற்றிய படம் (நெகட்டிவ் ஹீரோ சப்ஜெக்ட்) என்பதால் அஜித்துக்கு மிகவும் பொருத்தமான படம் என்றும் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் கூறினார்.

இதில் அஜித்துக்குக் கதாநாயகி இல்லை; பாடல்களும் இல்லை. மொத்தத்தில் ஹாலிவுட் பாணியில் ஒன்றரை மணி நேரத்தில் முடியும் விதத்தில் இப்படம் உருவாகவிருக்கிறது.