Home One Line P1 சகாயம் அரசியலில் கால் பதிக்கிறார்

சகாயம் அரசியலில் கால் பதிக்கிறார்

743
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என்று பெயர் எடுத்த சகாயம், அரசியலில் கால் பதிக்கப் போவதாக கூறியுள்ளார்.

சென்னையில், “அரசியல் களம் காண்போம்” என்ற தலைப்பில் சகாயத்தை அரசியலுக்கு அழைக்கும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் சகாயம் கலந்து கொண்டார். மாநிலம் முழுவதும் ஏராளமான இளைஞர்கள் அதில் கலந்து கொண்டனர்.

“இளைஞர்களே வாருங்கள். ஊழலற்ற புதிய தமிழகத்தை உருவாக்குவோம். அரசியல் களம் காண்போம். நான் ஏற்றுக்கொள்கிறேன். அரசியல் களம் காண்பதை ஆமோதிக்கிறேன். நான் உங்களோடு பயணிக்க ஆசைப்படுகிறேன்,” என்று அக்கூட்டத்தில் பேசிய சகாயம் கூறினார்.

#TamilSchoolmychoice

மதுரை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய போது, கிரானைட் முறைகேடு, மணல் கொள்ளை உள்ளிட்டவற்றை வெளிக் கொண்டு வந்த சகாயம், தனது நேர்மையின் காரணமாக பல்வேறு இன்னல்களை சந்தித்துள்ளார். அவரது நேர்மையின் காரணமாக அடுத்தடுத்த பணியிட மாறுதல்கள், அதிகாரம் இல்லாத துறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளார்.