Home One Line P2 கொவிட் -19 2022-இன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கொவிட் -19 2022-இன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

532
0
SHARE
Ad

ஜெனீவா: கொவிட் -19 தொற்றுநோய் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடையும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் (ஐரோப்பிய) இயக்குனர் ஹான்ஸ் க்ளூக் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 இவ்வருடமும் தொடர்ந்து பரவும் என்றும், கடந்த ஆண்டை விட இது கட்டுப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

2020- ஆம் ஆண்டில் பரவிய ஆரம்பக் கட்டத்தை விட, மோசமான நிலைமை இப்போது முடிந்துவிட்டது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், எதிர்காலத்தில் கொவிட் -19 தொற்றுநோயின் உண்மையான நிலைமையை யாராலும் அறிய முடியாது என்று அவர் நினைவுபடுத்தினார்,

“தொற்று தொடர்ந்து இருக்கும், ஆனால் பொருளாதாரத் தடைகள் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன். இது ஒரு நம்பிக்கையான செய்தி,” என்று அவர் கூறினார்.