Home One Line P1 நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது தேசத்துரோகம் அல்ல

நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது தேசத்துரோகம் அல்ல

515
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நீதிமன்ற தீர்ப்புகளை விமர்சிப்பது, அவதூறு பரப்புவதாகவும், நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகவும் கருதக்கூடாது என்று ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறினார்.

விமர்சனம், நீதித்துறையில் பொதுவானதாகிவிட்டது மற்றும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவது கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாகும் என்று அவர் கூறினார்.

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக மலேசியாகினி செய்தி தளத்திற்கு கூட்டரசு நீதிமன்றம் 500,000 ரிங்கிட் அபராதம் விதித்த பின்னர், மலேசியாகினி தலைமை ஆசிரியர் ஸ்டீவன் கான் மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகு அளித்த அறிக்கைக்கு காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதை அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

“அவர்களுக்கு எதிராக விசாரணைக் அறிக்கையை திறப்பதால், மேலும் பேச்சு சுதந்திரம் தடைசெய்யப்படும். அவசரநிலை அறிவிப்பு மற்றும் நாடாளுமன்றத்தை இடைநிறுத்திய பின்னர் ஊடக சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது ஒரு புதிய விதிமுறையா?,” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

முன்னதாக, கோலா முடா மாவட்ட காவல் துறைத் தலைவர் அட்ஸ்லி அபு ஷா, ஸ்டீவன் கான் மற்றும் சந்தியாகு ஆகியோரை தற்போது தேசத் துரோகச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டத்தின் கீழ் விசாரித்து வருவதை உறுதிப்படுத்தினார்.