Home One Line P1 அதிக ஆபத்துள்ள ஆசிரியர்கள் முதலில் தடுப்பூசிகளைப் பெற வாய்ப்புள்ளது

அதிக ஆபத்துள்ள ஆசிரியர்கள் முதலில் தடுப்பூசிகளைப் பெற வாய்ப்புள்ளது

365
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற புதன்கிழமை தொடங்கி கொவிட் -19 தடுப்பூசி திட்டத்தின் முதல் கட்டத்தில் ஆசிரியர்களும் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால் கல்வி அமைச்சகம் அதிக ஆபத்துள்ள குழுவில் உள்ள ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்.

தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் முதல் கட்டத்தில், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்காக கல்வி அமைச்சகம் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகத்துடன் கலந்துரையாடி வருவதாக துணை கல்வி அமைச்சர் முஸ்லீம் யஹாயா தெரிவித்தார்.

“கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், தடுப்பூசி பெற அதிக ஆபத்துள்ள ஆசிரியர்களுக்கு அமைச்சகம் முன்னுரிமை அளிக்கும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 தடுப்பூசி பெறுபவர்களில் முதல் கட்டமாக இருக்க விரும்பும் கல்வியாளர்கள் உட்பட சில குழுக்களிடமிருந்து அரசாங்கம் பல விண்ணப்பங்களைப் பெற்றதாக அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் முன்பு கூறியிருந்தார்.

அவ்விண்ணப்பம் நியாயமானதாகக் காணப்படுவதாக அவர் கூறினார்.