Home உலகம் இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கப்படும் – பான் கீ மூன்!

இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கப்படும் – பான் கீ மூன்!

709
0
SHARE
Ad

Ban_Ki_moonகொழும்பு, ஜூன் 12 – இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளுக்காக, ஐக்கிய நாடுகள் சபையின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் நிதியுடன், இலங்கைக்கு மேலும் அதிகமான வளங்கள் ஒதுக்கப்படும் என, ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே அவர் இதைத் தெரிவித்ததாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு செப்டெம்பரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வின் போது, நியூயார்க்கில் வைத்து அதிபரைச் சந்திக்க ஆவலமாக உள்ளதாகவும் பான் கீ மூன் அப்போது தெரிவித்துள்ளார்.