Home இந்தியா அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை அகற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தை அகற்ற உயர் நீதிமன்றம் மறுப்பு!

693
0
SHARE
Ad

jeyaa 55சென்னை, ஜனவரி 14 – அரசு அலுவலகங்களில் ஜெயலலிதா படத்தினை நீக்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி தாக்கல் செய்த மனுவில்,

“முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியதை அடுத்து அரசு அலுவலகங்களில் உள்ள ஜெயலலிதா படங்களை நீக்க வேண்டும்” என்று மனு அளித்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய குழு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி ஆஜராகி, அரசு அலுவலகங்களில் தேசியத் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் படங்களை வைப்பது என்பது அரசு கொள்கை முடிவு.

#TamilSchoolmychoice

இது போன்ற அரசு கொள்கை விவகாரங்களில் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதாடினார்.

விசாரணையின் முடிவில், அரசு அலுவலகங்களில் யார் படத்தை வைக்க வேண்டும் என்று அரசின் கொள்கை முடிவு என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் தலைவர்களின் படங்களை வைப்பதில் குழப்பமில்லாத முடிவை அரசு எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.