Home கலை உலகம் ட்விட்டரில் 11 மில்லியன் ரசிகர்கள் கொண்ட ஷாருக் கான்!

ட்விட்டரில் 11 மில்லியன் ரசிகர்கள் கொண்ட ஷாருக் கான்!

594
0
SHARE
Ad

Shahrukh-Khan1புதுடெல்லி, ஜனவரி 22 – பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை ட்விட்டர் பக்கத்தில் 11 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். அமிதாப் பச்சன்னுக்கு பிறகு இவரே அதிகமான ரசிகர்கள் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ’ஹேப்பி நியூ இயர்’ என்ற வெற்றி படம் கொடுத்த 49 வயதான ஷாருக் கான், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தினை 2010-ல் தொடங்கினார். இதுவரை 8136 ட்விட்களையும் செய்து 11 மில்லியன் ரசிகர்களை பெற்றுள்ளார்.

அமிதாப் பச்சன் இதுவரை 37,887 ட்விட்களை செய்து 12 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ளார். அமீர்கான் (10.8 மில்லியன்), சல்மான் கான் (10.2மில்லியன்), தீபிகா (9.13மில்லியன்),

#TamilSchoolmychoice

ப்ரியங்கா (8.51மில்லியன்), ஹிருத்திக் (8.22மில்லியன்) மற்றும் அக்‌ஷேய் குமார் (7.27மில்லியன்) என ரசிகர்கள் இவர்களை பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.