கோலாலம்பூர், ஜனவரி 27 – பிலிப்பைன்ஸ் சுலு படையினரின் அடுத்த இளவரசராக (ராஜா மூடா) தனது சகோதரர் புக்டால் கிராம் முடிசூட்டுவதாக தன்னை சுலு சுல்தான் என்று கூறிக்கொள்ளும் இஸ்மாயில் கிராம் அறிவித்துள்ளார்.
(சுலு சுல்தான் குடும்பம்)
சுலு படையின் முதல் சுல்தான் ஷாரிப் உல் ஹாசிமின் நேரடி வாரிசு தான் இளவரசராகப் பதவி ஏற்க முடியும் என சுலு சட்டம் கூறுவதால், 68 வயதான புக்டால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்மாயில் தி ஸ்டார் செய்தி இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 13-ம் தேதி, தனது மூத்த சகோதரர் அஸிமுடி கிராம் (வயது 74) மாரடைப்பில் காலமானதைத் தொடர்ந்து, அரசு பள்ளி ஆசிரியரான புக்டால் இளவரசராகப் பதவி ஏற்கிறார்.
கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சபாவிலுள்ள லஹாட் டத்துவில் சுலுப் படையினர் ஊடுருவிய போது, அந்த படைக்குத் தலைமை வகித்தவர் அஸிமுடி கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.