கோலாலம்பூர், ஜனவரி 27 – இன்று பிற்பகல் 2.25 மணியில் இருந்து 3.10 மணி வரை, சுமார் 45 நிமிடங்களுக்கு உலகளாவிய நிலையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை தடைபட்டது.
இதனால், பேரதிர்ச்சிக்கு உள்ளான பயனர்கள், ‘டிவிட்டர்’, ‘வாட்ஸ் அப்’ போன்ற மற்ற நட்பு ஊடகங்களில் ஒரே நேரத்தில் படையெடுக்கத் தொடங்கினர்.
“பேஸ்புக்குக்கு என்னாச்சு?”, “ஏன் இன்ஸ்டகிராமும் வேலை செய்யல” என்று டிவிட்டர், வாட்ஸ் அப் குரூப்கள் எங்கும் கேள்விகளால் துளைத் தெடுத்துவிட்டனர்.
பயனர்களுக்கு ஏற்பட்ட தடங்களுக்கு வருந்தவதாக இன்ஸ்டகிராம் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு வந்த சிறிது நேரத்தில் பேஸ்புக்கும், இன்ஸ்டகிராமும் 45 நிமிடங்களுக்கு பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதில் முக்கியமான தகவல் என்னவென்றால், நேற்று மலேசியா ஏர்லைன்ஸ் இணையதளத்தை முடக்கிய, “Lizard Squad” குழு இந்த பேஸ்புக் முடக்கம் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.