அதில், மஇகா-வில் நிலவி வரும் பிரச்சனைகளைத் தீர்க்க பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தலையிட வேண்டும் என்று தெரிவித்தார்.
இது குறித்து சரவணன் மேலும் கூறுகையில், “பழனிவேலை மஇகா உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. முதலிலே 4000 மஇகா உறுப்பினர்கள் தலைவராக தேர்ந்தெடுத்தது டத்தோஸ்ரீ உத்தாமா சாமிவேலுவை தான். ஆனால் பிரதமர் இதில் தலையிட்டு நீண்ட காலம் சாமிவேலு பதவியில் இருந்து விட்டார் என்று கூறி அவரை தற்காலிகமாகப் பதவி விலகச் சொன்னார். அதற்குப் பின்பு இடைக்காலத் தலைவராகத் தான் பழனிவேல் பொறுப்பேற்றார்.”
“அதன் பிறகு, 2013-ம் ஆண்டு கட்சியின் தேசியத் தலைவர் சரியில்லை என்று கூறி டாக்டர் எஸ்.சுப்ரமணியத்தை தலைவராகக் கொண்டு வர போட்டிக்கு நாங்கள் தயாராக இருந்த நேரத்தில், பிரதமர் என்னையும், பழனிவேலையும், சுப்ரமணியத்தையும், தேவமணியையும் வீட்டிற்கு அழைத்து, பழனிவேலுக்கு இன்னும் ஒரு தவணை கொடுங்கள். அவர் இந்த ஒரு தவணை இருந்து விட்டு, பதவி முடிவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னால் விலகி விடுவார் என்று கூறி சுப்ரமணியத்தை போட்டி போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்” என்று சரவணன் கூறினார்.
இதனால் தான், அப்போது தானும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்றும், அப்போது பிரதமர் அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தான் பழனிவேலுக்கு தலைவர் பதவி விட்டுக் கொடுக்கப்பட்டது என்றும் சரவணன் விளக்கமளித்தார்.
எனவே இவ்விவகாரத்தில் நிச்சயம் பிரதமர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் சரவணன் உறுதியாகத் தெரிவித்தார்.