கோலாலம்பூர், மார்ச் 1- உண்மையில் பெண் ஆணைவிட உடலில் உறுதிகொண்டவள், ஒரு குழந்தையையே பெற்றெடுக்கும் உடல் வலிமையை பெற்றவள் பெண், அதற்கேற்ப அவளின் உடல் உறுப்புகள், இடுப்பு எலும்புகள் எல்லாம் அமையப் பெற்றிருக்கிறது என்பதே உண்மை.
இந்த உண்மை உணர்ந்த பல பெண்கள் இன்று ஆணிற்கு நிகரான பல பணிகளை நிகழ்த்துகின்றனர். இன்னும் அவர்கள் உறுதிபெற உடற்பயிற்சி கை கொடுக்கும். பெண்களின் தோள்பட்டை அவரவர்களின் தலை அமைப்பு, உடம்பின்வாகு, இடுப்பின் அளவு போன்றவற்றை பொறுத்து அமைந்திருக்க வேண்டும்.
தோள்பட்டை அகலமாக இருந்து தலை சிறுத்திருந்தால் நன்றாக இருக்காது. தலையும், இடுப்பும் வனப்பாக இருந்து தோள்பட்டை வனப்பாக இல்லை எனினும் அழகு வராது.
இப்படி தோள்பட்டை பெற்ற பெண்கள் தினமும் ஏதாவது ஒரு வேளையில் சாதாரணமாக நின்று கொண்டு கையை இடதும் வலதுமாக சிலுவை குறிபோல விரித்து மடக்கி குறைந்தது பத்து நிமிடம் தினம் செய்து வந்தால் தோள்பட்டை அழகாகலாம். இத்துடன் இவர்கள் உடம்பை வளைத்து நெளித்து செய்யும் ஏரோபிக்ஸ் உடற்பயிற்சியினையும் மேற்கொள்ளலாம்.