Home அவசியம் படிக்க வேண்டியவை உயிர்கொல்லி நோய்களை 15 நிமிடங்களில் கண்டு பிடிக்கும் செயலி!

உயிர்கொல்லி நோய்களை 15 நிமிடங்களில் கண்டு பிடிக்கும் செயலி!

634
0
SHARE
Ad

elisa_howkitworksநியூயார்க், பிப்ரவரி 6 – உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும் உயிர் கொல்லி நோய்களான எச்ஐவி மற்றும் சிபில்லிஸ் போன்ற நோய்களை 15 நிமிடங்களில் கண்டுபிடிக்கும் புதிய செயலி ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர்.

இந்நோய்களை கண்டறிவதற்கே, பல நாட்கள் ஆகும் என்ற நிலையில், இந்த செயலி மூலம் பலர் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மருத்துவத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த இருக்கும் இந்த புதிய செயலியை, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரி மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். தி

#TamilSchoolmychoice

றன்பேசிகள் மற்றும் கணிப்பொறிகளுடன் இணைத்துக் கொள்ளும் வகையில் ஒரு சிறிய ‘டாங்கிளும்’ (dongles), அதனை இயக்குவதற்கு தேவையான செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த கருவியின் மேற்புறத்தில் கட்டை விரலை வைத்தவுடன், அது தானாகவே கட்டை விரலில் இருந்து ரத்த மாதிரியை எடுத்துக் கொள்ளும்.

5பின்னர் ரத்த மாதிரியை பரிசோதித்து 15 நிமிடங்களில் நோய் இருக்கிறதா?இல்லையா?என்பதை உடனடியாக நமக்கு தெரிவித்துவிடும்.

எச்ஐவி நோயினைக் கண்டறியும் ‘எலிஸா’ (ELISA) பரிசோதனைக்கு 18,450 டாலர்கள் செலவில் மருத்துவ உபகரணங்கள் தேவைப்படும் நிலையில், இந்த புதிய கருவியை 34 டாலர்கள் செலவில் உருவாக்கிவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர் கொல்லி நோய்களை கண்டறிவதற்கே மிகுந்த செலவும், அதிகமான காலமும் ஆகி வந்த நிலையில், இந்த புதிய கருவி ஏற்படுத்தி உள்ள மாற்றம், மருத்துவ பரிசோதனைகளுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் என்பது நிச்சயம்.