சீனாவின் புதுவருடத்தை முன்னிட்டு மைத்திரிபால சிறிசேன விடுத்த வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது; “எனது ஆட்சிக்காலத்திலும் சீனாவுடனான உறவுகள் வலுவான நிலையில் தொடரும்” என உறுதியளித்துள்ளார்.
“இலங்கைக்கும் சீனாவுக்குமான உறவுகள் பல நெருக்கடிகளை கடந்தும் நீடிப்பவை. பரஸ்பர நன்மையை அடிப்படையாகக் கொண்டவை”.
“2014-ஆம் ஆண்டை திரும்பிப்பார்க்கும் போது, சீனா அதிபரின் வரலாற்று முக்கியத்துவம், எமது வலுவான உறவை மேலும் பலப்படுத்தும்”.
“இரு நாடுகளுக்கும் மக்களுக்கும் பயனளிக்க கூடிய விதத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வழிவகுத்துள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன் என மைத்திரிபால விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.