கொழும்பு: இலங்கை மக்கள் மத்தியில் மதம் ரீதியிலான பிளவு தொடர்ந்தால் மேலும் ஒரு உள்நாட்டுப் போர் தொடங்கும் என அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். அப்படி போர் ஏற்பட்டால் அதில் வீழ்வது ஒட்டுமொத்த தேசமாக இருக்கும் என்று அவர் கவலை தெரிவித்தார்.
இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகை தினத்தில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நிகழ்த்தப்பட்டன.
இந்த தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உள்ளூர் இஸ்லாமிய அமைப்புகள் தான் காரணம் என குற்றம் சாட்டப்படும் நிலையில், அந்நாட்டில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை புரிந்திருந்த போது, முல்லைத் தீவு பகுதியில் பேசிய மைத்ரிபால சிறிசேனா இலங்கையில் அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இல்லையேல், இஸ்லாமியர்களிலிருந்து ஒரு பிரபாகரன் உருவாகிவிடக் கூடும் என்று தெரிவித்தார்.