Home கலை உலகம் தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு!

தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக பாரதிராஜா தேர்வு!

864
0
SHARE
Ad

சென்னை: தமிழ் நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக இயக்குனர் பாரதிராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் இணைந்து இயக்குனர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட சங்கம் தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கம். இச்சங்கத்தின் கடந்த இரண்டு முறையும் தலைவராக இருந்தவர் இயக்குனர் விக்கிரமன். இப்போது புதிய தலைவர் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

கடந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்ட விக்கிரமன் இயக்குனர் சங்கத்திற்காகவும் இயக்குனர்களுக்காகவும் பல நற்பணிகளை செய்து முடித்தார். பாரதிராஜா தலைமையில் ஒரு குழு தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது