Home நாடு குழந்தையை கொடுமை செய்த மாதுவை காவல் துறை தேடுகிறது!

குழந்தையை கொடுமை செய்த மாதுவை காவல் துறை தேடுகிறது!

713
0
SHARE
Ad
படம்: நன்றி மலேசிய காவல் துறை

கோலாலம்பூர்: ஒரு மாது ஒரு குழந்தையை மோசமான முறையில் கொடுமை செய்வது குறித்த காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வந்ததை அடுத்து, அது தொடர்பான விவரங்களை காவல் துறையினர் தேடி வருவதாக மலேசிய காவல் துறை தெரிவித்துள்ளது.

இது வரையிலும் அந்த காணொளி தொடர்பாக எந்தவொரு தரப்பினரும் காவல் துறையில் புகார் அளிக்காததை காவல் துறை தகவல்தொடர்புத் தலைவர் டத்தோ அஸ்மாவாதி அகமட் தெரிவித்துள்ளார்.

இந்த காணொளி குறித்து தகவல் உள்ள பொது மக்கள் முன்வந்து காவல் துறையை தொடர்புக் கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.

#TamilSchoolmychoice

ஒரு நிமிடத்திற்கும் மேல் நீடித்திருக்கும் இந்தக் காணோளி வாட்சாப்பில் பரவலாகப் பகிரப்பட்டது. அந்தக் காணொளியில் ஒரு மாது, சிறு குழந்தையை அடிப்பதும் வீசுவதுமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.