Home நாடு “நாடாளுமன்ற குழுவை கேட்க வேண்டிய அவசியமில்லை, இனி நான்தான் முடிவெடுப்பேன்!”- பிரதமர்

“நாடாளுமன்ற குழுவை கேட்க வேண்டிய அவசியமில்லை, இனி நான்தான் முடிவெடுப்பேன்!”- பிரதமர்

952
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அரசாங்க நியமனங்கள் குறித்து இனி தாம் முடிவு செய்ய இருப்பதாக பிரதமர் மகாதீர் முகமட் கூறியுள்ளார்.

சிறப்பு நாடாளுமன்ற குழுவுக்கு போதுமான சட்ட அனுபவங்கள் வரையறுக்கப்பட்ட பின்னரே முக்கியமான அரசு நியமனங்கள் குறித்து அக்குழுவுடன் விவாதிக்கபடும் என அவர் தெரிவித்தார். 

கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்த பின்னரே இக்குழு முழுமையாக செயல்பட முடியும் என அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த சட்டத்திருத்தை மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற வேண்டும். தற்போதைய சூழலில் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லைஎன பிரதமர் கூறினார்.

அண்மையில், அமைச்சரவை அல்லது நாடாளுமன்றத்தின் ஆலோசனையைக் கோராமல் ஒருதலைப்பட்சமாக ஒரு சில அரசு நியமனங்கள் நிறைவேற்றப்பட்டன. இதன் மூலமாக அரசாங்கத்தின் மேல்நிலை நியமனங்கள் பல தரப்பினரால் கேள்விக்குள்ளாக்கப்பட்டன.

அவர்களில் காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் லத்தீஃபா கோயா அடங்குவர்.

நான் அமைச்சரவைக் கலந்தாலோசிக்க வேண்டிய அவசியமில்லை. பல்வேறு நபர்களிடமிருந்து கருத்துக்களை நான் கேட்கிறேன், பின்னர் அவர்களின் குறை நிறைகளை அறிந்து அதன் அடிப்படையில் முடிவு செய்வேன்என்று டாக்டர் மகாதீர் கூறினார்.