Home நாடு ஓரினச் சேர்க்கையில் சிக்கிய பிகேஆர் அமைச்சர் யார்?

ஓரினச் சேர்க்கையில் சிக்கிய பிகேஆர் அமைச்சர் யார்?

1304
0
SHARE
Ad
முகமட் ஹசிக் அசிஸ்

கோலாலம்பூர் – நேற்று செவ்வாய்க்கிழமை முதல் சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கிய காணொளி ஒன்றில் இரண்டு ஆடவர்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதில் ஒருவர் பிகேஆர் கட்சியைப் பிரதிநிதிக்கும் மூத்த அமைச்சர் போன்ற தோற்றத்தில் இருந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, யார் அந்த அமைச்சர் என்ற ஆரூடங்களையும் எழுப்பியது.

இதனைத் தொடர்ந்து மூலத் தொழில் அமைச்சின் துணையமைச்சரான பிகேஆர் கட்சியின் ஷம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்னின் செயலாளர்களில் ஒருவரான முகமட் ஹசிக் அசிஸ் என்பவர் இன்று புதன்கிழமை (12 ஜூன்) அதிகாலை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில், அந்த அமைச்சருடன் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருப்பது நான்தான் என பகிரங்கமாக அறிவித்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளார்.

இப்போது எழுந்திருக்கும் கேள்வி சர்ச்சைக்குரிய காணொளியில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டிருக்கும் மற்றொரு ஆடவரான பிகேஆர் அமைச்சர் யார் என்பதுதான்!

#TamilSchoolmychoice

இதில் அதிர்ச்சி தரும் மற்றொரு தகவல் என்னவென்றால் காணொளியை வெளியிட்டிருக்கும் முகமட் ஹசிக் அந்த அமைச்சர் யார் எனப் பகிரங்கமாகப் பெயர் குறிப்பிட்டிருப்பதுதான்.

சண்டகான் நாடாளுமன்ற இடைத் தேர்தலின்போது அங்குள்ள தங்கும் விடுதி ஒன்றில் மே 11-ஆம் தேதி அந்த சம்பவம் நடைபெற்றதாகவும், தனக்குத் தெரியாமல் அந்தக் காணொளி எடுக்கப்பட்டிருப்பதாகவும் முகமட் ஹசிக் தெரிவித்துள்ளார்.

ஊழல் தடுப்பு ஆணையம் இந்த விவகாரத்தையும் அந்த அமைச்சரையும் விசாரிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கும் முகமட் ஹசிக், சம்பந்தப்பட்ட அந்த அமைச்சர் தலைவராகத் தொடர்வதற்கு தகுதியில்லாதவர் என்றும் தனது காணொளியில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் ஓராண்டு நிறைவை எட்டியிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தையே ஆட்டங் காணச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.