சிறுக் குற்றங்கள் தொடர்பில் தீவிரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தி, அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சமய நிகழ்வுகள் மற்றும் பொதுமக்கள் சந்திப்புகள் நடைபெறும் இடங்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும், அவை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
Comments