Home நாடு அரசு ஊழியர்களை பழிவாங்கும் செயலில் பாஸ் ஈடுபடாது!- ஹாடி அவாங்

அரசு ஊழியர்களை பழிவாங்கும் செயலில் பாஸ் ஈடுபடாது!- ஹாடி அவாங்

821
0
SHARE
Ad

அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் கடமைகளின் போது விசுவாசம், நேர்மை மற்றும் ஒருமைப்பாட்டை அங்கீகரிப்பதில் பாஸ் என்றும் நியாயமாக செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இது ஓர் அரசியல் வாக்குறுதி அல்ல, ஆனால், அல்லாஹ்வால் ஆளப்படும் இஸ்லாத்தின் போதனைகள்என்று அவர் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சியை அமைத்த போது, சில கொள்கைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவது கடினமாக இருந்தது. அதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தது 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆண்டதேசிய முன்னணியை இன்னமும் ஆதரிக்கும் அரசு ஊழியர்களின் நடவடிக்கையே.

#TamilSchoolmychoice

அவற்றை சரிபடுத்தும் வகையில் நம்பிக்கைக் கூட்டணி அரசு அதன் கொள்கைகளை வழிநடத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் வசதியாக ஒரு சில அதிகாரிகளை மாற்றியது.