Home உலகம் இந்தியாவில் தற்போதைய சமய சகிப்புதன்மையை பார்த்தால், காந்தி அதிர்ச்சியடைந்திருப்பார் – ஒபாமா!

இந்தியாவில் தற்போதைய சமய சகிப்புதன்மையை பார்த்தால், காந்தி அதிர்ச்சியடைந்திருப்பார் – ஒபாமா!

734
0
SHARE
Ad

obama-5வாஷிங்டன், பிப்ரவரி 6 – இந்தியாவில் தற்போதைய சமய சகிப்புதன்மையை பார்த்தால், மகாத்மா காந்தி மிகவும் அதிர்ச்சி அடைந்திருப்பார் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் அதிபர் மாளிகையில் மூவாயிரத்துக்கும் அதிகமான முக்கிய விருந்தினர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா பேசியதாவது;

“இந்தியாவின் சமய சகிப்புத்தன்மை புண்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சில இடங்களில் சமய சகிப்புத் தன்மை என்பது குறிப்பிட்ட சில பிரிவினரின், சமய நம்பிக்கை, கலாச்சாரம் இவற்றின் மீது தாக்குதல் நடத்துவது போல் உள்ளது.”

#TamilSchoolmychoice

“இதுபோன்ற நிகழ்வுகள், மத சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளை அதிர்ச்சியடை வைத்திருக்கும்’ என ஒபாமா கூறினார்.

குடியரசு தின விழாவில் பங்கேற்க 3 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஒபாமா. பின்னர் 27-ஆம் தேதி டெல்லியில் மாணவர்கள் மத்தியில் பேசுகையில்;

“இந்தியா, நம்பத்தகுந்த அழகான நாடு. இந்திய அரசியல் சட்டத்தின், 25-வது பிரிவானது, அனைவரும் தங்களின் மத நம்பிக்கைகளை தடையின்றி தொடரவும், அவற்றை வளர்த்துக்கொள்ளவும் சுதந்திரம் அளிக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் நேற்று அமெரிக்காவின் அதிபர் மாளிகையில் 3000-த்திற்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் அதிபர் ஒபாமா பேசியதாவது,

“இந்தியாவின் சமய சகிப்புத்தன்மை புண்படுத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் சில இடங்களில் சமய சகிப்புத்தன்மை என்பது குறிப்பிட்ட சில பிரிவினரின், சமய நம்பிக்கை, கலாச்சாரம் இவற்றின் மீது தாக்குதல் நடத்துவது போல் உள்ளது”.

“இதுபோன்ற நிகழ்வுகள் , மத சுதந்திரத்திற்காக பாடுபட்ட மகாத்மா காந்தியடிகளை அதிர்ச்சியடை வைத்திருக்கும்” என்றார். இந்தியா வந்திருந்த போது இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து அவர் பேசியதைவிட அமெரிக்கா சென்றது இந்தியாவில் மதம் குறித்த தனது கருத்தை மாற்றி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.