Home நாடு மத்திய செயலவையை கூட்ட பழனிவேலுக்கு ஒரு வாரம் கெடு!

மத்திய செயலவையை கூட்ட பழனிவேலுக்கு ஒரு வாரம் கெடு!

523
0
SHARE
Ad

Untitledகோலாலம்பூர், பிப்ரவரி 18 – மஇகா விவகாரம் தொடர்பில் இன்று அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் தற்போது அதிகாரப்பூர்வமற்ற இடைக்கால மத்திய செயலவை கூட்டம்  நடைபெற்று வருகின்றது.

அக்கூட்டத்திற்கு முன்பாக இன்று காலை பிரதமருடனான சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு சுப்ரா விளக்கமளித்தார்.

அப்போது இன்று நடைபெறும் மத்திய செயலவைக் கூட்டம் குறித்து சுப்ரா கூறுகையில், “இன்றைய கூட்டம் முன்பே திட்டமிடப்பட்டு விட்டது. இன்றைய கூட்டத்தில் தேர்தலைப் பற்றியும், தேர்தல் குழு அமைப்பதைப் பற்றியும் முடிவெடுக்கலாம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இன்று காலை பிரதமருடனான சந்திப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் சில மாற்றங்களுடன் இன்றைய கூட்டம் நடைபெறுகின்றது.”

#TamilSchoolmychoice

“டத்தோஸ்ரீ பழனிவேல் 2009-ம் ஆண்டு மத்திய செயலவை உறுப்பினர்கள் மூன்று பேரை (சக்திவேல், ஜஸ்பால் சிங், விஎஸ்.மோகன்) தற்காலிகமாக ஒரு வருடத்திற்கு பதவி நீக்கம் செய்திருந்தார். ஆனால் 19-ம் தேதி (ஜனவரி) ஆர்ஓஎஸ் அனுப்பிய கடித்தத்தில் இந்த விவகாரம் முடியும் வரை கட்சியில் எந்த பதவிகளில் இருந்தும் யாரையும் நீக்கம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. அதை பற்றி இன்றைய கூட்டத்தில் விவாதிப்போம்.”

“இன்று பிரதமருடான சந்திப்பில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, தேர்தல் குழுவை அமைக்க கூடும் மத்திய செயலவைக் கூட்டம் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்படுகின்றது. டத்தோஸ்ரீ பழனிவேல் ஒருவாரத்தில் மத்திய செயலவைக் கூட்டத்தைக் கூட்டுவதாகக் கூறியுள்ளார். அப்படி ஒருவாரத்தில் மத்திய செயலவையை கூட்டவில்லை என்றால், நாங்கள் தொடர்ந்து அந்த கூட்டத்தை நடத்துவோம்” இவ்வாறு சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, சுப்ராவுடன் மஇகா தேசிய உதவித்தலைவர்கள் டத்தோ சரவணன், டத்தோ எஸ்.கே.தேவமணி, மஇகா தலைமைச் செயலாளர் சக்திவேல், மகளிர் பிரிவுத் தலைவர் மோகனா முனியாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.