Home நாடு ஆர்ஓஎஸ் உத்தரவுகளை பழனிவேல் ஏற்றுக்கொண்டார் – சுப்ரா தகவல்

ஆர்ஓஎஸ் உத்தரவுகளை பழனிவேல் ஏற்றுக்கொண்டார் – சுப்ரா தகவல்

713
0
SHARE
Ad

Untitledகோலாலம்பூர், பிப்ரவரி 18 – மஇகா விவகாரம் தொடர்பில் இன்று பிரதமரை சந்தித்த அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், அச்சந்திப்பில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து விளக்கமளிக்க கட்சித் தலைமையகத்தில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அச்சந்திப்பில் சுப்ரமணியம் கூறுகையில், “இன்று காலை நாட்டின் பிரதமர் நஜிப் துன் ரசாக் அவர்கள், துணைப்பிரதமர் (மொகிதின் யாசின்), தேசிய முன்னணி செயலாளர் (தெங்கு அட்னான்) மற்றும் டத்தோஸ்ரீ பழனிவேல் ஆகியோரோடு என்னையும் சந்தித்தார். அச்சந்திப்பில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.”

“முதல் முடிவாக, ஆர்ஓஎஸ் (சங்கங்களின் பதிவிலாகா) 5 டிசம்பர் 2014-ல் இருந்து 6 பிப்ரவரி 2015 வரைக்கும் விடுத்துள்ள பல உத்தரவுகளை ஏற்றுக்கொள்வதோடு அதை அமலாக்கம் செய்வது.”

#TamilSchoolmychoice

“இரண்டாவது 2009-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய செயலவை உறுப்பினர்கள், தற்காலிக மத்திய செயலவையை ஏற்படுத்தி, அதன் மூலம் கட்சியின் மறுதேர்தல் நடந்து முடியும் வரை பொறுப்பேற்பது. இந்த இடைக்கால மத்திய செயலவையில் இருந்து தேர்தல் குழுவை அமைத்து. அந்த தேர்தல் குழு தேர்தலை நடத்தும்.”

“மாண்புமிகு டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் அவர்கள் அடுத்தவாரம் மத்திய செயலவை கூட்டத்தை கூட்டுவதாகக் கூறியுள்ளார். அந்த கூட்டத்தில் தேர்தல் குழு அமைக்கப்பட்ட பிறகு, சங்கங்களின் பதிவிலாகா கொடுத்த கால அவகாசத்திற்கு தேர்தல் நடத்தப்படும். அதாவது ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரையில் தேர்தல் நடத்தப்படும். இந்த கருத்துக்களை எல்லாம் டத்தோஸ்ரீ பழனிவேல் ஏற்றுக்கொண்டார்” என்று சுப்ரமணியம் அறிவித்தார்.

இந்த சந்திப்பின் போது, சுப்ராவுடன் மஇகா தேசிய உதவித்தலைவர்கள் டத்தோ சரவணன், டத்தோ எஸ்.கே.தேவமணி, மஇகா தலைமைச் செயலாளர் சக்திவேல், மகளிர் பிரிவுத் தலைவர் மோகனா முனியாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.