Home கலை உலகம் ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் விவகாரம்: ரஜினியை சந்தித்து பேசுகிறார் சரத்குமார்!

‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் விவகாரம்: ரஜினியை சந்தித்து பேசுகிறார் சரத்குமார்!

638
0
SHARE
Ad

sarath-kumarசென்னை, பிப்ரவரி 23 – ‘லிங்கா’ விநியோகஸ்தர்களிடம் நடிகர் சரத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பிச்சை எடுக்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, ரஜினியை சந்தித்து பேச இருக்கிறார் சரத்குமார்.

ரஜினிகாந்த் நடித்து வெளியான ‘லிங்கா’ படத்தால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி திருச்சி, செங்கல்பட்டு விநியோகஸ்தர்கள் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினர்.

போராட்டத்தை தொடர்ந்து ‘லிங்கா’ படத் தயாரிப்பாளர் தரப்பில் 10 சதவீதம் நஷ்ட ஈடு தொகை தருவதாக கூறப்பட்டது. இதனை ஏற்க மறுத்து விநியோகஸ்தர்கள், பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தது சினிமா வட்டாரத்தையே பரபரப்புக்குள்ளாக்கியது.

#TamilSchoolmychoice

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விநியோகஸ்தர்கள் போராட்டம் நடைபெறும் அதேநாளில் எதிர் போராட்டத்தை நடத்தப்போவதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் அறிவித்தனர்.

இந்த பரபரப்பு அறிவிப்புக்கு மத்தியில் ‘லிங்கா’ விநியோகஸ்தர்களிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது, தங்களுக்கு ரூ.33 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்டது. அதற்கு சரத்குமார் ரூ.33 கோடியில் உங்களால்  எவ்வளவு   குறைத்து கொள்ள முடியும் என்று சரத்குமார் கேட்டார்.

அதற்கு ரூ.8 கோடி எங்களால் குறைத்துக் கொள்ள முடியும். கண்டிப்பாக ரூ.25 கோடி வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கூறினார்கள்.

lingaa,என்னுடைய ‘சண்டமாருதம்’ வெளியாகிறது. வரும் 23-ஆம் தேதி ரஜினிகாந்தை சந்தித்து பேசிவிட்டு உங்களை அன்றைய தினமே நல்ல முடிவோடு சந்திக்கிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

அதற்கு விநியோகஸ்தர்கள் சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். பேச்சுவார்த்தையின் முடிவில், எங்களால் இன்னும் ரூ.3 கோடியைக் கூட குறைத்துக் கொள்ள முடியும்.

ஆனால், ரூ.22 கோடியில் இருந்து குறைத்துக் கொள்ள வாய்ப்பில்லை என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் இறுதியாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தையின் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதால், விநியோகஸ்தர்கள், தங்களது பிச்சை எடுக்கும் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளனர்.

ரஜினிகாந்திடம் சரத்குமார் நடத்த உள்ள பேச்சுவார்த்தைக்கு பின்னரே, விநியோகஸ்தர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய உள்ளனர். லிங்கா பரபரப்பு இன்னும் நீடிக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.