Home apponly முரசு 30ஆம் ஆண்டு விழா – மாலன், அழகிய பாண்டியன் பாராட்டு எழுத்தோவியங்கள்!

முரசு 30ஆம் ஆண்டு விழா – மாலன், அழகிய பாண்டியன் பாராட்டு எழுத்தோவியங்கள்!

981
0
SHARE
Ad

MURASU 30 years 600 x 600கோலாலம்பூர், பிப்ரவரி 24 – ‘முரசு அஞ்சல்’ தமிழ்க் கணினி மென்பொருள் உருவாகி பயன்பாட்டுக்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் நோக்கில் “இணைமதியம்” எனும்  தமிழ்த் தொழில் நுட்ப விழா இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

முரசு அஞ்சல் செயலியோடு செல்லினம் செல்லியல் செயலிகளின் மேம்பட்ட பதிப்புகளும் நிகழ்ச்சியில் வெளியிடப்படவுள்ளன.

எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி, சனிக்கிழமை, மாலை 7.00 மணி முதல் இரவு 9.30 மணிவரை கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சிலுள்ள நுண்கலைக் கோயில் (Temple of Fine Arts)  மண்டபத்தில் இந்த விழா நடைபெறவிருக்கின்றது.

#TamilSchoolmychoice

இணைமதியம் விழா குறித்த அறிவிப்புகளையும், கட்டுரைகளையும் கீழ்க்காணும் இணைப்பில் விரிவாகக் காணலாம்:

http://www.selliyal.com/?p=81719

“இணைமதியம்” 30 ஆண்டு கால முரசு அஞ்சலின் வரலாற்று விழா! செல்லினம்-செல்லியல் மேம்பாடுகள் காணும் தமிழ்த் தொழில்நுட்ப விழா!

இலக்கியவாதிகள் – பிரமுகர்கள் கட்டுரை

Maalan

மாலன் 

இந்த விழா குறித்தும், முரசு அஞ்சல், செல்லினம், செல்லியல் குறித்தும், முரசு அஞ்சல் மென்பொருளின் பயன்பாட்டோடு பல ஆண்டுகள் தொடர்பு கொண்ட பலர் தங்களின் கண்ணோட்டங்களையும், கருத்தோவியங்களையும் வழங்கி வருகின்றனர்.

அவர்களில் பிரபல தமிழக எழுத்தாளரும், ‘புதிய தலைமுறை’ வார இதழின் ஆசிரியருமான மாலன் வழங்கிய கட்டுரையை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.

http://www.selliyal.com/?p=82178

“முரசு அஞ்சல்: தமிழின் பெருமிதம்” – பிரபல தமிழக பத்திரிக்கையாளர் மாலன்

Alagia-Pandiyan-2-Spore

து.அழகிய பாண்டியன் 

அடுத்ததாக, சிங்கை தமிழ் வானொலியின் தலைவராக இருந்தவரும், தற்போது சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் தமிழ் முரசு நாளிதழின் துணையாசிரியருமான து.அழகிய பாண்டியன் வழங்கியுள்ள கட்டுரையை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்.

http://www.selliyal.com/?p=82237

“செல்லினம், ​செல்லியல், அ​ஞ்சல் – புதிய பரிமாணம்” – சிங்கை அழகிய பாண்டியனின் பாராட்டு!