கோலாலம்பூர், மார்ச் 31 – கடந்த மார்ச் 14-ம் தேதி, ‘இணைமதியம்’ தமிழ் தொழில் நுட்ப விழா முரசு அஞ்சலின் 30ஆம் ஆண்டு விழாவாகவும், செல்லினம், செல்லியல் செயலிகள் தளங்களின் புதிய தொழில்நுட்ப அறிமுகங்களின் விழாவாகவும் ஒருசேர நடைபெற்றது.
இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக கல்வி துணையமைச்சர் ப.கமலநாதன் கலந்து கொண்டு,முரசு அஞ்சல் முதல்நிலை இலவசப் பதிகையை அதிகாரபூர்வமாக வெளியிட்டார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழ் ஆர்வலர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ் மலேசியாவின் புகழ்பெற்ற ஓம்தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் முழுவதுமாக பதிவு செய்து தங்களது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். தமிழுக்கும், தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கும் தன்முனைப்போடு சிறந்த சேவையாற்றி வரும் ஓம்தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு செல்லியல் சார்பில் நன்றிகளை கூறிக் கொள்கின்றோம்.
‘இணைமதியம்’ நிகழ்ச்சியை காணொளி வடிவில் காண கீழ்காணும் இணைப்பைப் பயன்படுத்தவும்:-