Home இந்தியா ஏமனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க 2 கப்பல்களை அனுப்பியது மத்திய அரசு!

ஏமனில் தவிக்கும் இந்தியர்களை மீட்க 2 கப்பல்களை அனுப்பியது மத்திய அரசு!

549
0
SHARE
Ad

two ships leave kochi to djiboutiகொச்சி, மார்ச் 31 – உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள ஏமனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்க, கொச்சி துறைமுகத்தில் இருந்து 2 பயணிகள் கப்பல்களை அனுப்பியது இந்திய மத்திய அரசு.

அரபு நாடான ஏமனில் ஷியா பிரிவை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள், அரசு படைகளை எதிர்த்து போரிட்டு வருகின்றனர். புரட்சி மூலம்  விரட்டியடிக்கப்பட்ட முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சலேயின் ஆதரவு, ராணுவ வீரர்களும் தற்போதைய அதிபர் அபேட்ரபோ மன்சூர் ஹாதிக்கும் எதிராக  களமிறங்கியுள்ளனர்.

இவர்களின் தாக்குதலை சமாளிக்க, சவுதி அரேபியாவும் அதன் 10 நட்பு நாடுகளும் ஹாதி அரசுக்கு ஆதரவாக ஏமனில் கிளர்ச்சியாளர்கள்  மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் அங்கு உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

ஏமனில் தங்கி பணிபுரியும் தங்கள் நாட்டு மக்களை பத்திரமாக மீட்டு வர அனைத்து நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. ஏமனில் 3,500  இந்தியர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.

செவிலியர்கள் (நர்ஸ்) உள்ளிட்ட பல பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை  பத்திரமாக மீட்டு இந்தியா அழைத்து வர மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக 2 பயணிகள் கப்பல்கள் நேற்று காலை கொச்சி  துறைமுகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

இவை 5 அல்லது 7 நாட்களில் சென்றடையும். இந்த இரு கப்பலிலும் தலா 1200 பயணிகள் பயணம் செய்ய  முடியும். அனைவருக்கும் தேவையான உணவு, தண்ணீர், மருத்துவ வசதிகளுடன் அந்த கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கொச்சி துறைமுக செயலாளர் ஜிஜோ  தோமஸ் தெரிவித்தார்.