Home நாடு வெப்பம் மார்ச் இறுதியில் தணியும் – வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்

வெப்பம் மார்ச் இறுதியில் தணியும் – வானிலை ஆராய்ச்சி மையம் தகவல்

559
0
SHARE
Ad

A005799723808057765புத்ரா ஜெயா, பிப்ரவரி 25 – நாட்டின் பல பகுதிகளில் நிலவி வரும் வறண்ட மற்றும் வெப்பமான வானிலை மார்ச் மாத இறுதியில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மைய தலைமை இயக்குநர் டத்தோ சே கயா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது வடகிழக்கு பருவக் காலத்தின் இறுதிப் பகுதி என்று குறிப்பிட்ட அவர், இதன் காரணமாக பல பகுதிகளில் குறைந்த அளவே மழை பெய்யும் என்றும், அதனால் வெப்பமான, வறண்ட வானிலை நிலவுவதாகவும் கூறியுள்ளார்.

“கடந்த ஆண்டு இதே காலத்தில் நிலவிய வானிலைக்கும் தற்போதைய வானிலைக்கும் பெரிதாக வித்தியாசம் இல்லை. தற்போது 33 முதல் 35 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் நிலவுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 3 டிகிரி மட்டுமே வித்தியாசம்.

#TamilSchoolmychoice

“ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான பருவக் காலத்தில் தீபகற்ப பகுதியில் ஈரமான வானிலையும், மதியம் மற்றும் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்யும். ஜூன் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும் தென்மேற்கு பருவ காலத்திற்கு முன் கனமழை பெய்வது வழக்கமான ஒன்று,” என்று சே கயா தெரிவித்தார்.