Home நாடு ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு: அரசு ஊழியர் உட்பட மூவர் கைது!

ஐஎஸ்ஐஎஸ் உடன் தொடர்பு: அரசு ஊழியர் உட்பட மூவர் கைது!

534
0
SHARE
Ad

 

handcuffகோலாலம்பூர், மார்ச் 4 – ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகத்தின் பேரில் அரசு ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி, தொடங்கி மார்ச் 2-ம் தேதிக்குள் மூவரும் கைதாகி உள்ளனர். பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலிசாரின் சிறப்புப் பிரிவு மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் ஒரு பெண் மற்றும் இரு ஆடவர்கள் இக்குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாக, அறிக்கை ஒன்றின் வழி ஐஜிபி காலிட் அபுபாக்கர் உறுதி செய்துள்ளார்.

#TamilSchoolmychoice

கைதான 29 வயது பெண் ஓர் இல்லத்தரசி என்றும், அவர் சிரியா சென்று ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைய இருந்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும் உள்ளூர் பெண் ஒருவரையும் அத்தீவிரவாத அமைப்பில் சேர அவர் மூளைச்சலவை செய்தது தெரிய வந்துள்ளது.

இரண்டாவது சந்தேக நபர் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது வர்த்தகர் ஆவார். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஆர்வம் கொண்டுள்ள மலேசியர்களுக்கு நிதியுதவி அளித்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மூன்றாவது சந்தேக நபர் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த அரசு ஊழியர். இவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் என்பதுடன் ஃபேஸ்புக் வலைதளத்தில் தனிக் கணக்கு தொடங்கி அதை மலேசியர்கள் பலர் பயன்படுத்த உதவி செய்ததாகத் தெரிகிறது.

இந்த கைது நடவடிக்கையின் மூலம் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த புகாரின் பேரில் கைதான மலேசியர்களின் எண்ணிக்கை 77ஆக உயர்ந்துள்ளது.