Home நாடு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அன்வார் பங்கேற்க சிறைத்துறை அனுமதி மறுப்பு

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அன்வார் பங்கேற்க சிறைத்துறை அனுமதி மறுப்பு

729
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர், மார்ச் 4 – அடுத்த வாரம் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு சிறைத்துறை அனுமதி மறுத்துள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அன்வாரின் குடும்பத்தாருக்கு அத்துறை அனுப்பி உள்ளதாகத் தெரிகிறது.

“சிறைத்துறை அனுமதி மறுத்திருப்பது உண்மைதான்,” என்று அன்வாரின் மூத்த மகள் நூருல் இசா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அன்வாரின் வழக்கறிஞர்கள் அறிக்கை ஒன்றை வெளியிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

அன்வார் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்கக் கோரி அவரது குடும்பத்தார் தாக்கல் செய்த மனுவை சிறைத்துறை தள்ளுபடி செய்துவிட்டதாக அன்வாரின் வழக்கறிஞர்களில் ஒருவரான சிவராசாவும் உறுதி செய்தார்.

இது குறித்து தற்போது மேற்கொண்டு கருத்து தெரிவிக்க இயலாது என்று குறிப்பிட்ட அவர், அன்வாருக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணம் எதையும் சிறைத்துறை தெரிவிக்கவில்லை என கூறினர்.

“அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்காதது நியாயமற்ற செயல். அன்வார் சார்பில் உள்துறை அமைச்சரிடம் தான் மனு அளிக்கப்பட்டது. ஆனால் சிறைத்துறை தலைமைச் செயலர் சுல்கிஃப்ளி பதிலளித்துள்ளார். அன்வார் இப்ராகிம் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் மற்றும் பெர்மாத்தாங் பாவ் தொகுதி உறுப்பினர். அவரது எதிர்க்கட்சித் தலைவர் பதவி சட்டப்படியும் அரசியல் சாசனப்படியும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. நாட்டு மக்கள் மற்றும் ஜனநாயகத்தின் நலன் கருதி, அவர் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும். உள்துறை அமைச்சரும் அரசாங்கமும் ஜனநாயகத்தையும் நாட்டின் மிக உயர்ந்த சட்ட அமைப்பான நாடாளுமன்றத்தையும் மதிக்க வேண்டும்,” என்று அன்வாரின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.