Home நாடு செம்பாக்கா இடைத்தேர்தல்: ஞாயிற்றுக்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது பாஸ் 

செம்பாக்கா இடைத்தேர்தல்: ஞாயிற்றுக்கிழமை வேட்பாளரை அறிவிக்கிறது பாஸ் 

687
0
SHARE
Ad

pas 1

கோலாலம்பூர், மார்ச் 5 –  செம்பாக்கா தொகுதி இடைத்தேர்தலுக்கான பாஸ் கட்சி வேட்பாளர் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் துணை ஆணையர் டத்தோ முகமட் அமார் நிக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 10-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மார்ச் 22-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

#TamilSchoolmychoice

கிளந்தான் பாஸ் சார்பாக இந்த இடைத்தேர்தலில் போட்டியிட 3 பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த விவரம் பாஸ் தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் நிக் அப்துல்லா கூறினார்.

“பரிசீலனையில் உள்ள மூவருமே ஆண்கள். செம்பாக்கா தொகுதியைச் சேர்ந்தவர்கள். மூவரும் உலாமாக்கள். மூவரில் ஒருவர் கூட காலஞ்சென்ற டத்தோ நிக் அப்துல் அசிஸ் அவர்களின் வாரிசு அல்ல,” என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் நிக் அப்துல்லா.

செம்பாக்கா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த டத்தோ நிக் அப்துல் அசிஸ் கடந்த பிப்ரவரி 12-ம் தேதி காலமானார். இதையடுத்து அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.