Home நாடு பகாங் இளவரசர் வீட்டில் திருடியவருக்கு 7 மாத சிறை!

பகாங் இளவரசர் வீட்டில் திருடியவருக்கு 7 மாத சிறை!

541
0
SHARE
Ad

rsz_courthammerகோலாலம்பூர், மார்ச் 5 – பகாங் இளவரசர் வீட்டில் திருடியவருக்கு 7 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 24 முதல் 25-ம் தேதிக்கு உட்பட்ட காலத்தில் அவர் இக்குற்றத்தை செய்துள்ளார். முகமட் ஃபைசான் (34 வயது) என்ற அந்த ஆடவர் பட்டப்பகலில் இளவரசரின் வீடு பூட்டப்படாமல் இருப்பதைக் கண்டு அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார்.

பிறகு அங்குள்ள குளிர்சாதன (ஏர்கோன்) இயந்திரங்கள், விலையுயர்ந்த விளக்குகள், பித்தளை கம்பிகள் உள்ளிட்ட பல பொருட்களை அவர் திருடியுள்ளார். பின்னர் அவற்றை வேறு ஒருவரிடம் அவர் விற்றார்.

#TamilSchoolmychoice

இந்நிலையில் திருடப்பட்ட பொருட்களை வாங்கிய நபர் காவல்துறையில் இது குறித்து தெரிவிக்க, முகமட் ஃபைசானின் குட்டு அம்பலமானது. இதையடுத்து நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்ட அவர், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.

மாஜிஸ்திரேட் சைஃபுல் அக்மார் அவருக்கு 7 மாத சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.