Home நாடு முரசு 30ஆம் விழா – “அஞ்சல் ஒரு திருப்புமுனை” – தமிழகத்தின் மணி மு....

முரசு 30ஆம் விழா – “அஞ்சல் ஒரு திருப்புமுனை” – தமிழகத்தின் மணி மு. மணிவண்ணன்!

963
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 4 – (எதிர்வரும் மார்ச் 14ஆம் தேதி சனிக்கிழமை, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள நுண்கலைக் கோயில் மண்டபத்தில் மாலை 7.00 மணி முதல், இரவு 9.30 மணி வரை, “இணைமதியம்” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் முரசு அஞ்சல் 30ஆம் ஆண்டு நிறைவு விழா – மற்றும் செல்லினம், செல்லியல் தளங்களின் புதிய தொழில் நுட்ப மேம்பாடுகள் அறிமுகம் காணும் தொழில் நுட்ப விழா – குறித்து தமிழ்க் கணினி உலகில் குறிப்பிடத்தக்க தமிழகப் பிரமுகர் மணி மு.மணிவண்ணன்  (படம்) வழங்கியுள்ள சிறப்புக் கட்டுரை இது) 

Manivannan

“நீ பசியாய் இருந்தாய்.  நான் உன் பசி தீர்த்தேன்.”

#TamilSchoolmychoice

“நீ தாகமாய் இருந்தாய்.  நான் உனக்குத் தண்ணீர் தந்தேன்.”

“நீ வருத்தப்பட்டுப் பாரம் சுமந்தாய்.  நான் உன் சுமையை இறக்கி வைத்தேன்.”

“நீ தனிமையில் தவித்தாய்.  நான் உன்னைத் தோழர்களோடு இணைத்தேன்.”

“நீ எண்ணங்களோடு சிறையில் இருந்தாய்.  நான் உனக்குச் சிறகுகள் தந்தேன்.”

இந்த ஆறுதல் சொற்கள் கடவுளிடமிருந்து மனிதனுக்கு வந்தவை மட்டுமல்ல.  என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக வந்த ஒரு மென்பொருள் எனக்கு அளித்த உறுதிகளும்தான்.

இருபத்தைந்தாண்டுகளுக்கு முன்னர், இணையம் என்ற விந்தையுலகம், பல்கலை ஆய்வாளர்களிடமும், மாணவர்களிடமும், தகவல் தொழில்நுட்ப முனைவோர்களிடமும் மட்டுமே இருந்த காலம்.

அமெரிக்காவில் பட்ட மேற்படிப்புக்குப் பின்னர் வேலையில் சேர்ந்து சில ஆண்டுகள் கழித்து, இணையத்தின் தொழில்நுட்ப வேலையோடு கூடவே, அதில் தகவல் தொடர்புக்கான செயலிகளோடு விளையாடிக் கொண்டிருந்த நேரம்.

Manivannan Chennai

மணி மு.மணிவண்ணன்

என்னுடன் வேலைபார்த்தவர்களில் ஒருவரும் இந்தியரில்லை.  என் வீட்டின் அருகே ஒரே ஒரு தமிழ்க்குடும்பம் மட்டுமே இருந்தது.  தமிழர்களைப் பார்ப்பதரிது.  தமிழர்களோடு பேசுவதும் அரிது என்று தவித்திருந்த காலம்.

தமிழகத்தை அழைத்துத் தொலைபேசியில் பேசலாம் என்றால், அந்தக் காலத்தில் ஒரு நிமிடத்துக்கு $3.50 செலவாகும்.  அப்படியே அழைத்தாலும், வீட்டில் தொலைபேசி இல்லை.  தமிழகத்தில் பக்கத்து வீட்%