Home உலகம் கிரிக்கெட்: பாகிஸ்தான் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

கிரிக்கெட்: பாகிஸ்தான் 129 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

581
0
SHARE
Ad

pakistan-odi-celeb2-700நேப்பியர், மார்ச் 4 – உலகக்கோப்பை கிரிக்கெட் இன்றைய ஆட்டத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 129 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி 2-வது வெற்றி பெற்றது.

mishbah-ul-haq-wc-batபாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. முன்னதாக டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி பந்து வீச தீர்மானித்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.

pak-vs-uae-wc340 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கட்டுகளை இழந்து 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 129 ரன்கள் வித்தியாசத்தில் தனது 2-வது வெற்றியை பதிவுசெய்தது.

#TamilSchoolmychoice