Home வணிகம்/தொழில் நுட்பம் பூஜ்ஜியம் அடிப்படைக் கட்டணம் – மலிண்டோ சிறப்புத் தள்ளுபடி

பூஜ்ஜியம் அடிப்படைக் கட்டணம் – மலிண்டோ சிறப்புத் தள்ளுபடி

722
0
SHARE
Ad

malindo-airகோலாலம்பூர், மார்ச் 4 – இரண்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மலிண்டோ ஏர் நிறுவனம், வாடிக்கையாளர்கள் தங்களது பயணங்களுக்கு விமான நிலைய வரி மற்றும் இதர கட்டணங்களை மட்டும் செலுத்தும் சிறப்பு சலுகையை இன்று அறிவித்தது.

பூஜ்ஜியம் அடிப்படை கட்டணம் (RM0 base fare) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த சிறப்பு சலுகையைப் பெற இன்று முதல் மார்ச் 22-ம் தேதி வரையில் முன்பதிவு செய்யலாம் என்று மலிண்டோ நிறுவனம் அறிக்கை விடுத்துள்ளது.

“கேஎல்ஐஏ 2 விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பேங்காக், பாலி, பண்டுங், ஜகார்த்தா, சிங்கப்பூர், லங்காவி, கோத்தா கினபாலு மற்றும் கூச்சிங் ஆகிய இடங்களுக்கு செல்லும் பயணங்களுக்கு பூஜ்ஜியம் அடிப்படை கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், உள்நாட்டு விமான சேவைகளில் சுபாங்கிலிருந்து பினாங்கு, லங்காவி, கோத்தா பாரு, ஜோகூர் பாரு, அலோர் ஸ்டார், கோல திரெங்கானு மற்றும் தீபகற்ப மலேசியாவில் இருக்கும் மற்ற விமான நிலையங்களுக்கு செல்லும் விமானப் பயணங்களுக்கும் பொருந்தும்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மலிண்டோ நிறுவனம் போயிங் 737 ரக விமானங்கள் மற்றும் ஏடிஆர் டர்போப்ராப்ஸ் ரக விமானங்களை உள்ளடக்கிய 19 விமானங்களைக் கொண்டு ஆகியாவிற்குள் இருக்கும் 6 நாடுகளுக்கு பயண சேவையை மேற்கொண்டு வருகின்றது.

ஈப்போ மற்றும் கோத்தா பாருவிற்கு இடையே வாரத்தில் மூன்று முறையும், ஜோகூர் பாரு மற்றும் கெர்தேவிற்கு இடையே வாரத்தில் நான்கு முறையும் மற்றும் இந்தியாவிலுள்ள விசாகப்பட்டினத்திற்கு வாரத்தில் மூன்று முறையும் விமான சேவைகளை மேற்கொள்ளும் புதிய திட்டங்களை மலிண்டோ நிறுவனம் கடந்த மாதம் அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.